8 ஆண்டுகளாக காணாமல் போன தனது மகனை தேடும் முதியவரான தந்தை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தை பிறப்பிடாமக்கவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் கடந்த 2018 ம் ஆண்டு 3 ம் மாதத்திலிருந்து காணாமல் போயுள்ளார்.
இவர் கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
குறித்த காணாமல் போன நபர் காணாமல் போனமை தொடர்பில் 10.03.2018 அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.
பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நபர் காணாமால் போன தினத்திலிருந்து ஒரு வார காலம் வரை அவரது தொலைபேசி இயங்கியிருக்கிறது.
பலர் அதில் பேசியிருக்கிறார்கள், ஆனால் காணாமால் போன நபர் பேசவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
காணாமல் போனமை தொடர்பாக செய்யப்பட்ட பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவரான செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதாவது தகவல் யாராவது அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு குடும்பத்தினர் கொரியுள்ளனர்
0774323487
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே