வடமராட்சியில் 33 வயது இளைஞன் வெட்டிக்கொலை

#SriLanka #LANKA4 #Old #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
வடமராட்சியில் 33 வயது இளைஞன் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிராம கோடு பகுதியில் 33 வயது இளைஞன் ஒருவன் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று 09/09/2026 இரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கொலை செய்யப்பட்ட நபர் கடைக்கு வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே மோட்டார் சைக்கிளில் ஏறி புறப்பட முற்பட்ட போது எதிரே வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வளிமறித்து வாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் பருத்தித்துறை பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நடந்த இடத்திற்கு காலை 11:00 மணியளவில் சென்று பருத்தித்துறை நீதாவான் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தடையா ஆய்வு போலீசாரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு உட்படுத்தி வருவதுடன் பருத்தித்துறை போலீஸ் பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4