தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட விவகாரம் - முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
#SriLanka
#Gold
#HighCourt
#gun
Thamilini
1 hour ago
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தங்கம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது தொடர்பான இவ்வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே