பிரான்ஸில் மீண்டும் ஒரு அருங்காட்சியகத்தில் திருட்டு
#FRANCE
#Article
#Robbery
#LANKA4
#museum
#L4
Prasu
2 hours ago
பிரான்ஸின் ரிவியேராவில் கேன்ஸ்-சுர்-மெர் நகரில் உள்ள ரெனோயர் ரெனோய்ற் அருங்காட்சியகத்தில் நான்கு ஓவியங்கள் திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்களை பொலிஸார் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய துரத்திச் சென்ற போது கொள்ளையர்கள் வசம் இருந்த ஒரு ஓவியம் கீழே விழுந்ததாகவும், ஏனைய மூன்று ஓவியங்களுடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொள்ளையர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே