நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: 2 பெண்களுக்கு விளக்கமறியல்!
நோர்வூட் பிரதேச செயலகத்தில் ரூ.2 கோடிக்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் பிரிவு பொறுப்பாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இருவரும் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.2 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பிரதான சந்தேகநபர் ஒருவரின் சகோதரரின் வங்கிக் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவி வகித்த அவரின் பணியும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அஸ்வெசும நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் CIDயினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே