கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு பிணை மறுப்பு – விளக்கமறியல் நீடிப்பு!
#SriLanka
#Gotabaya Rajapaksa
#LANKA4
#Security
#Bail
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#Remand
Abi
1 hour ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (09) சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அரச நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில் சுகீஸ்வர பண்டார கடந்த ஜூன் 18ஆம் திகதி பொலிஸ் மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் சந்தேகநபர் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே