வெப்பமான வானிலை குறித்து அம்பர் எச்சரிக்கை!

#SriLanka #weather #LANKA4 #Warning #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
வெப்பமான வானிலை குறித்து அம்பர் எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை செப்டம்பர் 09 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்: வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா குருநாகல் மொனராகலை ஹம்பாந்தோட்டை குறித்த பகுதிகளில் பகல் வேளைகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை மட்டத்தை’ எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம் வெயிலில் இருப்பதால் களைப்பு, சோர்வு மற்றும் வெப்பத் தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடுமையான உடல் உழைப்பை குறைத்துக்கொள்வதுடன், வெளியில் செல்லும்போது இலேசான, வெண்ணிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து, போதுமானளவு நீர் அருந்தி அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4