இந்து குழுவின் வருகையால் புறக்கணிக்கப்பட்ட ஈபிள் கோபுர பெண் ஊழியர்கள்

#FRANCE #Women #strike #LANKA4 #Workers #EiffelTower #L4
Prasu
2 hours ago
இந்து குழுவின் வருகையால் புறக்கணிக்கப்பட்ட ஈபிள் கோபுர பெண் ஊழியர்கள்

இந்து குழுவின் வருகையின் போது பெண் ஊழியர்கள் 'புறக்கணிக்கப்பட்டதால்' ஈபிள் கோபுர ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின், பாரிஸில் உள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸில் முதல் முறையாக இந்துக் கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தை BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவரான மகாந்த் சுவாமி மகாராஜ், வேத மந்திரங்கள் ஓத பிரதீஷ்டை செய்துவைத்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி குழுவினரின் வருகையின்போது பாரிஸில் பணியில் இருந்த பெண் ஊழியர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சிஜிடி தொழிற்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "பெண் ஊழியர்கள் தங்கள் பாலினத்தின் அடிப்படையில் புறக்கணிக்கப்படுவதற்கும், மாற்றப்படுவதற்கும் மற்றும் கவனிக்கப்படாமல் ஆக்கப்படுவதற்கும் வழிவகுத்த பணியிட அறிவுறுத்தல்களை" ஊழியர்கள் கண்டித்துள்ளனர்.

"சிலர் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறி மற்ற பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சில பதவிகளில் அவர்களுக்குப் பதிலாக ஆண்கள் நியமிக்கப்பட்டனர்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4