சட்டவிரோதமாக கடல்வழியாக இந்திய சென்ற 13 பேர் கைது

#India #SriLanka #ARREST #Police
Thamilini
3 hours ago
சட்டவிரோதமாக கடல்வழியாக இந்திய சென்ற 13 பேர் கைது

கடல்வழியாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் கீழ் பெண் உள்பட 13 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் குழுவினர் கடல் வழியாக இந்தியாவை அடைய முயன்றபோது, ​​இந்திய சுங்க அதிகாரிகளால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள்  கருங்கோடித்தீவு, மாம்பிட்டிய, மெடவச்சியா, ஹல்துமுல்ல, வெல்லவாய, மொனராகல, மாவடிச்சேனை, பலங்கொட, திருகோணமலை, பதுளை மற்றும் பொத்துவில் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சந்தேகபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4