சவுதிக்குச் சொந்தமான சூப்பர்டேங்கர் மீது ஈரான் தாக்குதல் - இரு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் உயிரிழப்பு
#SriLanka
#world_news
#War
#Iran
#SaudiArabia
Thamilini
1 hour ago
சவுதிக்குச் சொந்தமான ஒரு சூப்பர்டேங்கர் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது.
சவுதியின் தேசிய கப்பல் நிறுவனமான பஹ்ரி, "ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தென் கொரியாவிற்குச் சொந்தமான 'செனகல் ப்ராஸ்பெரிட்டி' என்ற சூப்பர்டேங்கரும் தாக்குதலுக்கு உள்ளானதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சவுதியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஈரான் பதிலளிக்கவில்லை. ஆனால், ஜலசந்தி வழியாக அங்கீகரிக்கப்படாத பாதையைப் பயன்படுத்தியபோது கண்ணிவெடிகளில் சிக்கியதால் இரண்டு டேங்கர்கள் தீப்பிடித்ததாக அது முன்னதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே