தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் செப்டெம்பர் 05க்கு முன்னர் வெளியாகும்
2026ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என இன்று (02.09.2026) அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அனைத்து விடைத்தாள்களுக்கான மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளை உத்தியோகபூர்வமாக வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை மையங்களில் நடைபெற்றது. இதற்கு மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
பெறுபேறுகள் வெளியானதும், மாணவர்கள் தங்களது பரீட்சைப் பெறுபேறுகளை உத்தியோகபூர்வ பரீட்சைத் திணைக்கள இணையதளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே