ரஷ்யாவில் வேலை மோசடி: இலங்கையர்கள் சிக்கித் தவிப்பு!
#SriLanka
#Russia
#LANKA4
#Scam
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
ரஷ்யாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலங்கையர்களிடம் இலட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு, கம்புறுகமுவ, கண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடம் ஒருவருக்கு ரூ.1.8 முதல் 2.1 மில்லியன் வரை பணம் பெற்று ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும், அங்கு சென்ற பின்னர் உறுதியளிக்கப்பட்ட வேலை வழங்கப்படாமல், பணமின்றி பண்ணை ஒன்றில் துயரமான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களை மீட்டு இலங்கைக்கு அழைத்து வருமாறு அல்லது முறையான விசா மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே