வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்புவோருக்கு சிறப்பு போக்குவரத்து!
நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்பும் பயணிகளின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் இணைந்து இன்று (30) முதல் சிறப்பு போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.
மாத்தறை, காலி, கண்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் மக்களின் தேவையை கருத்திற்கொண்டு மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நீண்ட விடுமுறையின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சில பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சோதனை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பயணிகளின் வசதிக்காக அநுராதபுரம் முதல் மாத்தறை வரை இன்று சிறப்பு தொடருந்து சேவையொன்றும் இயக்கப்படுவதாக தொடருந்து ஊடகப் பேச்சாளர் அசாங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே