சாலையில் களமிறங்கிய ரோபோ போலீஸார்! சீனாவில் AI தொழில்நுட்பத்தின் புதிய முயற்சி
சீனா: சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள வூஹு நகர வீதிகளில், நகர்ப்புற போக்குவரத்தை கண்காணித்து நிர்வகிப்பதற்காக அதிநவீன ஸ்மார்ட் ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் தொப்பி மற்றும் ஒளிரும் சீருடை அணிந்துள்ள இந்த AI ரோபோக்கள், மனித போக்குவரத்து பொலிஸாரைப் போன்று சைகைகள் மூலம் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றன.
இந்த ரோபோக்கள் போக்குவரத்து சிக்னல்களுக்கு ஏற்ப கைகளை அசைத்து வாகனங்களை சீராக இயக்குவதுடன், பாதசாரிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.
மேலும், ஹெல்மெட் அணியாதவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டு, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கும் திறனையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
360 டிகிரி கேமராக்கள் மற்றும் LiDAR தொழில்நுட்பத்தின் உதவியுடன் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து, தேவையான தரவுகளை தொடர்புடைய அமைப்புகளுக்கு அனுப்பும் வகையிலும் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரங்களை நவீனமயமாக்கும் சீனாவின் முயற்சிகளில் இது மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே