கப்பம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த ‘பஸ் லலித்’ – பொலிஸார் அதிர்ச்சித் தகவல்
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’, இலங்கையின் முன்னணி தொழிலதிபர்கள் 21 பேரிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் கப்பமாக பெற்றுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், ‘பஸ் லலித்’ மீதான அச்சம் காரணமாக குறித்த தொழிலதிபர்கள் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பகுதியில் அதிக மதிப்புள்ள காணிகளை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒருவர் அரசுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்திருந்த சந்தர்ப்பத்தில், ‘பஸ் லலித்’ தனது சகாக்களைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அந்தக் காணியை கைப்பற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘பஸ் லலித்’ தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே