கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்!

#SriLanka #Colombo #people #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்!

இலங்கையின் வர்த்தகத் தலைநகரான கொழும்பில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், சுகாதார அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எலிகள் மூலம் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால், கொழும்புக்கு வரும் மக்களுக்கும் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக விடுதிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் எலித் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள் எலிகளின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களுக்கும் எலிகளால் சேதம் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த குப்பைகளை முறையாக அகற்றுதல், உணவுக் கழிவுகளை பாதுகாப்பாக நிர்வகித்தல் மற்றும் வடிகால் அமைப்புகளை சுத்தமாகப் பராமரித்தல் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

கொழும்பை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது அதிகாரிகளின் மட்டுமல்ல, பொதுமக்களின் பொறுப்பும் ஆகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4