திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் - சீனா கொடுத்த எச்சரிக்கை!
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்!
நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் முழுமையாக நீங்காத நிலையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மலைப்பகுதியில் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புதிய இயற்கைத் தடுப்பு ஒன்று உருவாகியுள்ளது.
அதில் ஏற்கனவே சுமார் 20 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் தண்ணீர் சேரக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.
இந்த தடுப்பு உடைந்தால், பெருமளவு தண்ணீர், சேறு மற்றும் பாறைகள் வேகமாக கீழ்நோக்கி பாய்ந்து திடீர் பெருவெள்ளம் ஏற்படக்கூடும்.
இதனால் நேபாளத்தின் போதேகோசி, திரிசூலி மற்றும் நாராயணி ஆறுகளின் கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படக்கூடும்.
இதையடுத்து, ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றுக்கு அருகில் செல்ல வேண்டாம் என நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சீன பொறியாளர்களும் தடுப்பு உடைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணக்கிட்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே