தமிழ்நாட்டில் 459 பேருக்கு அரசுப் பணி – முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்!

#SriLanka #Tamil Nadu #government #LANKA4 #ChiefMinister #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY
Abi
4 hours ago
தமிழ்நாட்டில் 459 பேருக்கு அரசுப் பணி – முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.08.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட 459 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இதன் அடையாளமாக, 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் நேரடியாக வழங்கினார்.

உதவிப் பொறியாளர்கள், வேளாண் அலுவலர்கள், இளநிலை அறிவியல் அலுவலர்கள், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், அரசுப் பணிகளுக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4