நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிய அவசர தொடர்பு இலக்கம் அறிமுகம்!
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெறவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
நேபாளத்தில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் அல்லது உதவி தேவைப்படுவோர் அமைச்சை பின்வரும் தொடர்பு வழிகளூடாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
துஷார ரொட்ரிகோ பொது இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகப் பேச்சாளர்
📱 கையடக்கத் தொலைபேசி / WhatsApp: 070 788 7778
📧 மின்னஞ்சல்: publicity@mfa.gov.lk
📠 தொலைநகல்: 0112 473899
அதிகளவான அழைப்புகள் கிடைத்து வருவதால், விரைவான மற்றும் துல்லியமான தொடர்பாடலுக்காக WhatsApp ஊடாக தகவல்களைப் பகிருமாறு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இலங்கையர்களின் நிலைமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் அமைச்சு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே