நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்: 384 சுற்றுலாப் பயணிகள் மாயம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரம்
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் புட்டே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் 291 பேர் வெளிநாட்டு பிரஜைகள் எனவும், 93 பேர் நேபாள பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், பாலங்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்மின் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக மீட்புப் பணிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலைமை தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து தகவல்களைச் சேகரித்து வருவதுடன், காணாமல் போனவர்களை கண்டறிந்து பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே