நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘ஆரோக்கிய மையங்கள்’ ஆரம்பம்!

#SriLanka #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘ஆரோக்கிய மையங்கள்’ ஆரம்பம்!

நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘Metro Uplift’ திட்டத்தின் கீழ் ‘Wellness Centres’ (நல்வாழ்வு மையங்கள்) அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாவது நலவாழ்வு மையம் கொழும்பு 14, புளூமெண்டல் ‘சிரிமுத்து செவண’ குடியிருப்பு வளாகத்தில், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த மையங்கள் மூலம் குடியிருப்பாளர்களின் உடல், உள, சமூக மற்றும் ஆன்மிக நலனை மேம்படுத்தும் வகையில் சிகிச்சை, விழிப்புணர்வு, மறுவாழ்வு மற்றும் வலுவூட்டல் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், முதியோர் பராமரிப்பு, போதைப்பொருள் தடுப்பு, ஊட்டச்சத்து, தாய்–சேய் சுகாதாரம், இளையோர் சுகாதாரம், கண் மருத்துவ முகாம்கள், யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகளும் இம்மையங்களில் வழங்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக கொழும்பிலுள்ள 8 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் நலவாழ்வு மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 2027ஆம் ஆண்டில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 24 குடியிருப்பு வளாகங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4