துன்னாலையில் நீண்டகாலமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
#SriLanka
#LANKA4
#liquor
#Long
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
அரச புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துன்னாலை காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நெல்லியடி பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது 20,000 மில்லிலீற்றர் கசிப்பு, 540,000 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக வடமராட்சி பகுதியில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே