குமார் சங்கக்கார திருகோணமலை கடற்படை அகாடமியில் அனுபவப் பகிர்வு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தலைமையில், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். கடற்படை வீரர்கள் தமது கடற்படை மற்றும் சிவில் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்குத் தேவையான பெறுமதிமிக்க கருத்துக்களை, குமார் சங்கக்கார தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டார்.
இதன்போது கருத்துப் பரிமாற்றத்துடன் சிறப்பு பட்டறையும் இடம்பெற்றது. மேலும், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியையும் குமார் சங்கக்கார பார்வையிட்டார்.
நிகழ்வை நினைவுகூரும் வகையில் குமார் சங்கக்காரவுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.
கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், பயிற்சி பெறும் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே