கனடாவின் ஒன்ராறியோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

#Arrest #Canada #drugs #Smuggling #lanka4Media #L4
Prasu
3 hours ago
கனடாவின் ஒன்ராறியோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்து, லண்டன் நகரைச் சேர்ந்த 3 பேரை ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை கைது செய்துள்ளது.

பல்வேறு தென்மேற்கு ஒன்ராறியோ சமூகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஃபெண்டானில், கொக்கைன், மெத்தாம்பெட்டமைன் ஆகிய ஆபத்தான போதைப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 5 திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சுமார் 20,000 கனடிய டாலர் ரொக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 2026 ஏப்ரல் மாதம் வால்போல் ஐலண்டில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4