கிளிநொச்சி – பளையில் LTTE பயிற்சி முகாமா? போலித் தகவல் பரப்பியதாக ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #Camp #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கிளிநொச்சி – பளையில் LTTE பயிற்சி முகாமா? போலித் தகவல் பரப்பியதாக ஒருவர் கைது!

கிளிநொச்சி, பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாம் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டதுடன், செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தி உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4