இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம்: நான்கு பேர் கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
இரத்மலானை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 5ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸை காவல்துறையின் சிறப்புக் குழுவினால் மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடொன்றில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் வழிகாட்டலிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவமானது இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே நிலவிவரும் மோதல் நிலையின் பின்னணியிலேயே இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே