தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்: நுகர்வோர் விவகார அதிகாரசபை திடீர் நடவடிக்கை!

#ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்: நுகர்வோர் விவகார அதிகாரசபை திடீர் நடவடிக்கை!

நாடு முழுவதும் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நடத்தப்பட்ட திடீர்ச் சோதனைகளின் போது, உந்துருளிகளுக்கான தரமற்ற 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், தரமற்ற முறையில் 3,500 தலைக்கவசங்களை தயாரித்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

தேசிய வீதிப் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் மஞ்சுள குலரத்னவின் தகவல்படி, ஆண்டுதோறும் வீதி விபத்துக்களால் 2,500 முதல் 2,700 பேர் வரை உயிரிழப்பதாகவும், அதில் சுமார் 1,000 மரணங்கள் உந்துருளி விபத்துக்களாலேயே ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4