உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பில் கருத்தமர்வு

#SriLanka #government #Lanka4 #council #Seminar #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பில் கருத்தமர்வு

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாட்டில், “உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை” தொடர்பான கருத்தமர்வு இன்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கருத்தமர்வில் தமிழக அரசின் உள்ளூராட்சித் துறை உயர்நிலைக் குழுக்களின் உறுப்பினரும், துறைசார் நிபுணருமான பேராசிரியர் G. பழனித்துரை விசேட அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது, மக்கள் தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை வழங்குவது மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கருத்தமர்வின் பின்னர் பேராசிரியர் G. பழனித்துரை உள்ளிட்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4