செம்மணி புதைகுழி அகழ்வு - மொத்தம் 507 எலும்புக்கூடுகள் அடையாளம்

#SriLanka #Jaffna #Lanka4 #skeleton #Chemmani Mass Grave #L4
Prasu
2 hours ago
செம்மணி புதைகுழி அகழ்வு - மொத்தம் 507 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், இன்று 46 வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது, புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 7 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், செம்மணிப் புதைகுழியில் இதுவரையில் 100 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம், மொத்தம் 507 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 501 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4