வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - மழையுடன் கூடிய வானிலையே நீடிக்கும்

#SriLanka #weather #Rain #Warning #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - மழையுடன் கூடிய வானிலையே நீடிக்கும்

வங்காள விரிகுடாக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) வலுவடைந்துள்ளது.

 இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இம்முறைமையினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றாலும், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

 மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

 ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

 மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

 இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!