பல்லன்சேன திறந்தவெளி சிறையில் கலவரம் – 28 கைதிகள் காயம்

#SriLanka #Prison #Lanka4 #Injury #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Riot
Abi
1 hour ago
பல்லன்சேன திறந்தவெளி சிறையில் கலவரம் – 28 கைதிகள் காயம்

இன்று (07) காலை பல்லன்சேன திறந்தவெளி சிறையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. சில கைதிகள் சிறையின் கூரையில் ஏறி போராட்டம் நடத்தியதுடன், சிறை அதிகாரிகளை நோக்கி கற்கள் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை, STF, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை களமிறக்கப்பட்டு கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது. 

பின்னர் சிறையின் கட்டுப்பாடு மீண்டும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கலவரத்தில் காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட சில கைதிகள் இச்சிறையில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை, மெகசின் மற்றும் குருவிட்ட சிறைகளிலும் அண்மையில் கலவரங்கள் பதிவாகியுள்ளதால், சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4