பொதுமக்களுடன் அமர்ந்து தம்ம உரையில் பங்கேற்ற ஜனாதிபதியின் மனைவி

#LANKA4 #President #wife #Public #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY
Abi
1 month ago
பொதுமக்களுடன் அமர்ந்து தம்ம உரையில் பங்கேற்ற ஜனாதிபதியின் மனைவி

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனைவி திருமதி மல்லிகா திஸாநாயக்க, வணக்கத்திற்குரிய கன்னோருவே சிரிதம்ம தேரரினால் நிகழ்த்தப்பட்ட தம்ம உரை நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.

கெப்பெட்டிபொல ஸ்ரீ அபயராஜ விகாரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் எவ்வித ஆரவாரமுமின்றி பொதுமக்களுடன் அமர்ந்து தம்ம உரையை செவிமடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுவெளியில் அரிதாகவே காணப்படும் திருமதி மல்லிகா திஸாநாயக்க இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாட்டுத் தலைவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது பொதுவாக முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். 

எனினும், இந்த நிகழ்வில் அவரது வருகையை முன்னிட்டு வெளிப்படையான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஜனாதிபதியின் மனைவி நிகழ்வில் கலந்துகொள்ளவிருந்தமை தொடர்பில் அங்கிருந்த பலருக்கும் முன்கூட்டியே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

எவ்வித விசேட ஆரவாரமுமின்றி பொதுமக்களில் ஒருவராக அமர்ந்து அவர் நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!