லலித் – குகன் வழக்கு: கோட்டாபய சாட்சியமளிக்க உத்தரவு!

#SriLanka #Gotabaya Rajapaksa #CourtOrder #LANKA4 #Case #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
லலித் – குகன் வழக்கு: கோட்டாபய சாட்சியமளிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போயிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களால் யாழ்ப்பாணத்திற்கு நேரில் வர முடியாது என கோட்டாபய ராஜபக்ஷ தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, அங்கிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்குமாறு நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!