சுவிற்சர்லாந்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்
சூரிச்சின் ஓபரெங்ஸ்ட்ரிங்கனில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சூக் மாகாணத்தில் திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓட்டுநர் தலைகவசம் இன்றி மற்ற வாகனங்களை இடது மற்றும் வலதுபுறமாக முந்திச் சென்று கொண்டிருந்த போது அதிகாரிகள் அவரைகளை நிறுத்த முயன்றுள்ளனர்.
அப்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நிறுத்தாமல் சூரிச்சை நோக்கிய A1H நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிரெய்லரில் மோதியுள்ளனர்.
இதன் போது இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 26 வயதுடைய இரண்டு அல்ஜீரியர்கள் எனத் தெரியவந்துள்ளது.
விபத்து விசாரணையின் போது, திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இந்தப் பொருட்களின் மூலம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே