சிறைகளில் தொடரும் பதற்றம்: விளக்கம் கோரும் சஜித்!

#SriLanka #Sajith Premadasa #Prison #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
சிறைகளில் தொடரும் பதற்றம்: விளக்கம் கோரும் சஜித்!

நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை தொடர்பில், சிறைச்சாலை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

மகஸின் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குருவிட்ட சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தற்போது பல்லன்சேனையில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் பொறுப்பான அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!