பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

#SriLanka #Mannar #Protest #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
49 minutes ago
பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கக் கோரி இன்று வெள்ளிக்கிழமை (07) காலை மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நீண்டகாலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காகப் போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“காணி இழந்த மக்களின் குரல்” அமைப்பின் ஏற்பாட்டில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையுடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மற்றும் மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இப்போராட்டம் அமைந்திருந்தது.

இதில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள், கிராம மக்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

வடக்கின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4