தூதரக ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்த நடவடிக்கை

#SriLanka #District #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தூதரக ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்த நடவடிக்கை

தூதரக ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் அலோக பண்டார, தூதரக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் தூதுவர் K. K. தேஷாந்த குமாரசிறி மற்றும் இரு அமைச்சுகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தற்போது தூதரக ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தூதரக விவகாரங்கள் பிரிவு மற்றும் ஐந்து பிராந்திய தூதரக அலுவலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்துவதன் மூலம் பொதுமக்கள் இலகுவாகவும் விரைவாகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், தற்போதுள்ள அலுவலகங்களுக்குச் செல்வதற்காக பொதுமக்கள் மேற்கொள்ளும் தேவையற்ற நீண்டதூரப் பயணங்களைக் குறைப்பதுடன், அலுவலகங்களில் ஏற்படும் நெரிசல், மக்கள் கூட்டம் மற்றும் சேவை தாமதங்களையும் குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.

மாவட்ட மட்டத்தில் இந்தச் சேவையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!