லங்கா மெட்ரோவின் புதிய சலுகை: ரூ. 799-க்கு வாரஇறுதியில் வரம்பற்ற பயணம்!
#SriLanka
#Travel
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம், 799 ரூபாய் என்ற ஒற்றைக் கட்டணத்தில் வாரஇறுதி நாட்கள் முழுவதும் மெட்ரோ பேருந்து சேவையில் வரம்பற்ற பயணத்தை அனுபவிக்கும் வகையில் வாரஇறுதி அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
நண்பர்களைச் சந்திக்கச் செல்வது, பல்கலைக்கழகங்களுக்கு பயணிப்பது, நகரத்தை வலம் வருவது அல்லது குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்வது என வாரஇறுதிப் பயணங்களுக்குப் பயணிகளுக்கு அதிக வசதியையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் வகையில் இந்த அனுமதிச்சீட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் தெரிவித்தது.
இந்த வாரஇறுதி அனுமதிச்சீட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:59 மணி வரை செல்லுபடியாகும்.
இந்த இரண்டு நாள் காலப்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவைகளில் வரம்பற்ற முறையில் பயணிக்க முடியும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே