சிறை கலவரங்களை தூண்டும் சக்திகள் யார் - பதில் உள்ளே

#SriLanka #people #Prison #drugs #Lanka4 #L4 #clash
Prasu
1 hour ago
சிறை கலவரங்களை தூண்டும் சக்திகள் யார் - பதில் உள்ளே

அண்மையில் கம்பஹா மகர சிறைச்சாலை கலவரத்துக்கு பின்னர் ஒரு கைதியின் தாயார் ஊடகத்தின் முன் இப்படி பேசுகின்றார் " அதாவது எனது மகன் போதைவஸ்து பாவிப்பது அவனது பணத்தில் அதற்கு ஏன் போலீசார் தலையிடுகின்றனர் ? என்ற கேள்விதான். 

இந்த போதைப்பொருள்கள் எப்படி இலங்கைக்குள் வந்தது அதன் ஆரம்ப வியாபாரிகள் யார் யார்? இன்று பல தலைமுறைகளை கடந்து வந்துள்ள இந்த வியாபாரத்தின் ஆரம்பகர்த்தாக்களை கொஞ்சம் தேடி பார்ப்போம்.

இலங்கையில் கொழும்புதான் போதைப்பொருள் வியாபாரிகளின் கூடாரமாக இருந்து வந்தது. இலங்கைக்கு வரும் போதைப்பொருள்கள் கடல் மார்க்கமாகவே வரத்தொடங்கியது. 

ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ஊடாக இந்த வியாபாரம் சர்வதேச மட்டத்துக்கு வியாபித்திருந்தது. 90களில் ஆரம்பித்த இந்த வியாபாரம் 2000 ஆண்டுகளில் உச்சத்தை தொட்டது.

கொழும்பில் மத்திய வீதி பகுதி ஹலஸ்டொப், மாளிகாவத்த, மருதானை, வாழைத்தோட்டம், தமிழ்நாடு (இது கொழும்பு தமிழ்நாடு) இந்த பகுதிகள்தான் போதை வாஸ்து வியாபாரிகளின் கோட்டைகளாகும். 

இதற்கு பிரதான ஒருங்கிணைக்கும் தலைவராக இருந்தவர் மொஹீதீன் ஹாஜியார், ஹலாஸ்டோப் மற்றும் மாளிகாவத்தை பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொட்ட நெளபருக்கு இது பிடிக்கவில்லை.

தனது ஆட்களை வைத்து மொகிதீன் ஹாஜாரை சுட்டு கொலை செய்கின்றார் இருப்பினும் அவர் நெளபரின் முன்னாள் தலைவர்தான் எனினும் தலைமை போட்டி கொலைக்கு வழிவகுக்கின்றது.

நெளபர் தனது தலைமையின் கீழ் புதிய குழுவை உருவாக்குகின்றார், விஜேபால என்ற விஜயபாலன், இசக்கிமுத்து சுதாகரன் என்ற சுதா, அயூப்கான் என்ற குடு நூர் , கிம்புலா ஏல குணா என்ற சின்னையா குணசேகரன் , கென்னடி பெர்னாண்டோ,மரைக்கார் புவாட் என பலபேர் இருந்தனர்.

மேற்படி நபர்களின் பின்னால் மிகப்பெரும் துணைக்குழுக்கள் இருந்தன. உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியாவைக் கொலை செய்வதற்கு மூலக்காரணம் நெளபர் இரண்டாம் குறுக்குத்தெருவில் ஒரு கட்டிடத்தை இடித்து அதை பலாத்காரமாக கைப்பற்றிய வழக்குதான் அந்த கட்டிட உரிமையாளர் 50 மில்லியன் நஷ்ட்டஈடு கேட்ட வழக்கின் தொடர்ச்சிதான். 

கிம்புலா ஏல குணா தற்போது இந்திய சிறையில் உயிரோடு இருக்கும் ஒரு நபர் இவர் ஹரோயின் வியாபாரத்து அப்பால் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி 1999ல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையாரை படுகொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. 

குடு நூர் மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளை புரிந்தவர் பலமுறை பொலிஸாரால் தேடப்பட்டு இறுதியில் வாரியப்போல பகுதியில் இவருடன் சுமார் 7பேர் கைது செய்யபட்டனர். இன்னும் வரும்...

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4