முதன்முறையாக அரச நிதியில் அதிவேக நெடுஞ்சாலை திட்டம்– 2030 இலக்கு!

#SriLanka #government #Road #Project #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
முதன்முறையாக அரச நிதியில் அதிவேக நெடுஞ்சாலை திட்டம்– 2030 இலக்கு!

இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பு, 2030 ஆம் ஆண்டுக்குள் மேலும் 132 கிலோமீற்றர் நீளத்திற்கு விரிவாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான முக்கிய திட்டங்களில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம மற்றும் பொத்துஹெர – கலகெதர ஆகிய பகுதிகளின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், குருணாகல் – கலேவெல இடையிலான 38 கிலோமீற்றர் பகுதியின் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.233 பில்லியன் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களின் பங்களிப்புடன் 12 ஒப்பந்தப் பொதிகளாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

முதன்முறையாக, இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் வெளிநாட்டு கடன்களை நம்பாமல் இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4