பிரான்சில் சமையல் துறையில் சாதனை செய்த ஈழ தமிழ் மகன் நிரோஜன் குலசிங்கம்

#FRANCE #Cooking #Food #Tamil #LANKA4 #SriLankan #Eelam #L4
Prasu
1 month ago
பிரான்சில் சமையல் துறையில் சாதனை செய்த ஈழ தமிழ் மகன் நிரோஜன் குலசிங்கம்

பாரிஸில் சமையல் கலையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் ஈழத்தமிழரான சமையல் கலைஞர் நிரோஜன் குலசிங்கம். 

சமையல் உலகின் 'ஆஸ்கார்' என மதிக்கப்படும் 'Gault & Millau' வழிகாட்டியில் இடம்பெறும் முதல் ஈழத்தமிழர் இவர் ஆவார்.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிரோஜன் குலசிங்கம், பிரான்சில் சமையல் கலையில் சிறந்து விளங்கி வருகிறார். 

பாரிஸில் உள்ள பிரபல 'Capucci' உணவகத்தில் தலைமைச் சமையல் கலைஞராகப் பணியாற்றி வரும் இவருக்கு இந்தச் பெருமை கிடைத்துள்ளது.

'Gault & Millau' வழிகாட்டியானது உலகளவில் ஆயிரக்கணக்கான உணவகங்களை ஆய்வு செய்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வருகிறது. 

இதில் நிரோஜனின் உணவகம் இடம்பிடித்திருப்பது உலகளாவிய தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது. 

இது குறித்து நிரோஜன் கூறுகையில், "இந்த அங்கீகாரம் எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; எனது மக்கள் மற்றும் நாட்டின் வெற்றியும் கூட" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் இது தனது வாழ்நாளில் கிடைத்த மிக முக்கியமான தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார். பாரிஸ் போன்ற உலக நகரங்களில் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருவதுடன், தற்போது சமையல் கலையிலும் உச்சத்தைத் தொட்டுள்ளது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வரலாற்றுச் சாதனை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஊடகங்கள் மற்றும் சமையல் கலை நிபுணர்கள், நிரோஜனின் அர்ப்பணிப்பும் கடின உழைப்புமே இந்த உயர்வுக்குக் காரணம் என்று பாராட்டியுள்ளனர்.

ஈழத்தின் பெயர் சொல்லும் வகையில் சமையல் கலையில் சாதனை படைத்துள்ள நிரோஜன் குலசிங்கத்திற்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சாதனை உலக அரங்கில் தமிழ் மக்களின் திறமையையும், கலைச் சிறப்பையும் மேலும் ஒரு முறை பிரகாசிக்கச் செய்துள்ளதுடன், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!