இலங்கை கடற்பகுதியில் பரபரப்பு: கப்பலிலிருந்து 17 வெற்று சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன!

#SriLanka #Colombo #Container #Lanka4 #Ship #Sea #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
இலங்கை கடற்பகுதியில் பரபரப்பு: கப்பலிலிருந்து 17 வெற்று சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன!

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் பயணித்த வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் நீரோட்டத்தின் காரணமாக, இந்த கொள்கலன்கள் பேருவளை முதல் நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்பகுதிகளை நோக்கி நகரும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடல் பயணங்களை மேற்கொள்வோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் மிதக்கும் கொள்கலன்கள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4