இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி: 200 மில்லியன் கடன் நிதி ஒப்புதல்!

#SriLanka #Bank #Development #Lanka4 #economy #ADDA #Help #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி: 200 மில்லியன் கடன் நிதி ஒப்புதல்!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதலால் பிராந்திய பொருளாதாரங்களில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை சமாளிக்க, இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொள்கை அடிப்படையிலான கடன் உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளது.

இந்த நிதி, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், வெளிப்புற பொருளாதார அதிர்வுகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதுடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் போட்டித்திறனை உயர்த்தவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் சூழலை வலுப்படுத்தவும் இந்தக் கடன் உதவும் எனதெரிவித்துள்ளது.

உலகளாவிய வர்த்தகம், எரிசக்தி விலைகள் மற்றும் நிதிச் சந்தைகளில் மத்திய கிழக்கு பதற்றம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களின் மத்தியில், இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆதரிக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்த நிதியுதவி அமையும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4