மொரோக்கோ எல்லையில் பதற்றம் - 09 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!! இராணுவத்தை களமிறக்கிய ஸ்பெயின்!

#SriLanka #migrants #Spain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மொரோக்கோ எல்லையில் பதற்றம் - 09 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!! இராணுவத்தை களமிறக்கிய ஸ்பெயின்!

மொராக்கோ எல்லையை சட்டவிரோதமாக கடந்த குறைந்தது 09 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 சுமார் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் செவுட்டாவுக்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசிக்க முயற்சித்த நிலையில் குழப்பகரமான நிலமை ஏற்பட்டதாக அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

 புலம்பெயர்ந்தோர் நீந்தியும், வேலிகளை உடைத்துக்கொண்டும் நகருக்குள் நுழைவதை காணொளிகள் காட்டுகின்றன.

 தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் மையங்கள் திணறுவதைக் காரணம் காட்டி, செவுட்டாவின் பிராந்திய அரசாங்கத் தலைவர் ஜுவான் ஜீசஸ் விவாஸ் (Juan Jesús Vivas), எல்லையைப் பாதுகாக்க தேசிய அவசரநிலைப் பிரகடனம் மற்றும் இராணுவப் படைகளை அனுப்புமாறு அழைப்பு விடுத்தார்.

 இதற்கிடையே மொரோக்கோவின் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும்   ஸ்பெயின் தன்நாட்டின் எல்லையை பாதுகாக்க  இராணுவத்தை அனுப்பியுள்ளது. காவல்துறையை வலுப்படுத்த 60 ஆயுதப் படை வீரர்கள் அனுப்பப்பட்டதை ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

 ஆனால் தற்போதைய சட்டத்தின் கீழ், புலம்பெயர்வு ஓட்டங்கள் தேசிய அவசரநிலைப் பிரகடனத்திற்குத் தகுதி பெறாது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!