நாட்டின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் முதலுதவி நிபுணர்களை நியமிக்க பயிற்சி!

#SriLanka #Health #Aid #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
நாட்டின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் முதலுதவி நிபுணர்களை நியமிக்க பயிற்சி!

அவசரகால மருத்துவ தேவைகளின் போது உதவிகளை வழங்குவதற்காக நாட்டின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் முறையான பயிற்சியளிக்கப்பட்ட இரண்டு முதலுதவி நிபுணர்களை நியமிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

 விபத்தொன்றில் சிக்குபவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் வரை உரிய முதலுதவிகளை வழங்குவதும், அவருக்கு மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.

 "ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் குறைந்தபட்சம் இரண்டு பயிற்சி பெற்ற இளைஞர் முதலுதவியாளர்கள்" என்ற திட்டத்தின் தொடக்க விழாவும், முதல் குழுவுக்கான உத்தியோகபூர்வ பயிற்சியும் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 28,000 இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தொற்றுநோயற்ற நோய்கள் பிரிவு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4