தொடர் உயர்வுக்குப் பின் தங்கத்தின் விலை நிலவரம்!
#SriLanka
#prices
#Cold
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
9 hours ago
இலங்கையில் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி நிலவிய அதே விலையிலேயே இன்றைக்கும் தங்க வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சந்தை நிலவரப்படி, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தையில் காணப்பட்ட விலை ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரே விலையில் வர்த்தகமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே