இலங்கை பாராளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு

#SriLanka #Parliament #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #cyber crime
Thamilini
1 month ago
இலங்கை பாராளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு

இலங்கை பாராளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தின் 2025 ஆண்டு செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 

அறிக்கையின்படி, இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT), ஆய்வு காலத்தில் பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த ஒரு மதிப்பீட்டை நடத்தியது.

இந்த மதிப்பீடு, இணையப் பாதுகாப்பு தொடர்பான 56 பகுதிகளை ஆய்வு செய்தது, அவற்றில் 46 பகுதிகள் உயர் மட்ட அபாயத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. 

டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல், முக்கியத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீர்குலைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ வலைத்தளங்களைச் சிதைத்தல் உள்ளிட்ட தீங்கிழைக்கும் இணையவழிச் செயல்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், இது நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!