நோயாளிகளை விரைவில் அணுக அறிமுகமாகும் மோட்டார் சைக்கிள் சுகாதார திட்டம்!

#SriLanka #Health #ambulance service #Patients #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
நோயாளிகளை விரைவில் அணுக அறிமுகமாகும் மோட்டார் சைக்கிள் சுகாதார திட்டம்!

அம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கு தாமதமாகும் அவசர காலங்களில், நோயாளிகளுக்கு முதலுதவி வழங்குவதற்காக 1990 சுவசெரிய சேவையில் மோட்டார் சைக்கிள் சுகாதாரக் குழுக்களை அனுப்ப புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 10 ஆண்டுத் திட்டத்தின் கீழ், அம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தவும், உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 மோட்டார் சைக்கிள் சேவை திட்டம் நோயாளிகளை விரைவில் சென்றடைவதற்காக அறிமுகப்படுத்தப்படும் இந்த மோட்டார் சைக்கிள் சேவை பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

 அம்புலன்ஸ் வந்து சேரும் வரை நோயாளியின் இருப்பிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் மருத்துவக் குழு விரைந்து சென்று முதலுதவி அளிக்கும்.

 கால தாமதத்தைத் தவிர்த்தல்,போக்குவரத்து நெரிசல் அல்லது பல்வேறு காரணங்களால் அம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகும் சந்தர்ப்பங்களில் இந்தச் சேவை பெரிதும் உதவும்.

 அம்புலன்ஸ் விஸ்தரிப்பு,இந்த மோட்டார் சைக்கிள் திட்டத்துடன் சேர்த்து, இந்தியாவிடம் இருந்தும் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கடனுதவி மூலமாகவும் நூற்றுக்கணக்கான புதிய அம்புலன்ஸ்களைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!