ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) பரவலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம்!
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) பரவலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பன்றிக் காப்பீட்டுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, வேளாண்மை மற்றும் விவசாயக் காப்பீட்டு வாரியம் ஆகஸ்ட் மாதத்தை பன்றிக் காப்பீட்டு மாதமாக அறிவித்துள்ளது.
பன்றி வளர்ப்புத் துறையை வலுப்படுத்தவும், நோய் தொடர்பான இழப்புகளால் ஏற்படும் நிதிப் பாதிப்பைக் குறைக்கவும் ஜனாதிபதி பணிக்குழு எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இனப்பெருக்கப் பன்றிகளுக்குக் காப்பீடு செய்ய விவசாயிகளை ஊக்குவிப்பதிலும், காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதிலும் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் பன்றிகளின் இறப்புகள், விபத்துகள் மற்றும் பன்றிகள் தொடர்பான பிற நோய்களுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டம் பாதுகாப்பு வழங்குகிறது.
ஒரு விலங்குகிற்கு அதிகபட்சமாக 2 இலட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே