திருமணத்திற்கு முன் குந்தை பிறந்தால் பெற்றோர் பெயர் தேவையில்லை? சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விளக்கம்
குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றது. இது உண்மையென நினைத்து பலர் தற்போது இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளதாக பகிரப்பட்டு வருகின்ற தகவல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஆய்வில், கடந்த வருடம் இலங்கை மாத்திரமல்ல உலக நாடுகளில் வாழுகின்ற இலங்கை மக்களின் மனதினை துயரத்தில் ஆழ்த்திய சம்பவமான குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் ஊடக சந்திப்பினை மேற்கொண்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சரான சரோஜா சாவித்திரி போல்ராஜ் கருத்து.ஒன்றை தெரிவித்திருந்தார். அவையாவன..
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றங்கள்:
- பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி தவிர்க்கப்பட்டுள்ளது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமின்றி, தாயின் குடும்பப் பெயரின் மூலம் குழந்தைக்குப் பெயரிட முடியும்.
அரசாங்கத்தின் பராமரிப்பு உதவி:
- குழந்தையை வளர்ப்பதற்குப் பொருளாதார வசதி இல்லாத சூழலிலும், அக்குழந்தையின் பராமரிப்பு மற்றும் பாடசாலைக் கல்வி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.
கருக்கலைப்பைத் தவிர்த்தல்:
- நாட்டில் கருக்கலைப்புக்குச் சட்டப்பூர்வ அனுமதி கிடையாது என்பதால், எந்தவொரு பெண்ணும் சட்டவிரோதக் கருக்கலைப்புக்கு முன்வரக் கூடாது என வலியுறுத்துகிறார்.
பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் திட்டமிடல்:
- நம்பிக்கையான சூழல் அல்லது குடும்பப் பாதுகாப்பு இல்லாத பட்சத்தில், கரு உருவாவதைத் தடுப்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே